திரு. கந்தையா சுப்பிரமணியம் சண்முகலிங்கம்
(இளைப்பாறிய தலைவர் - தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை)
மறைவு: 11 செப்டம்பர் 2025
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சுப்பிரமணியம் சண்முகலிங்கம் அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நீலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்ஷினி, சொரூபிணி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
ராஜேந்திரனின் மாமனாரும்,
ஸ்ருதிஷாவின் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான சண்முகவடிவு, சண்முகராஜா, சண்முகரத்னம், சண்முகராணி மற்றும் சண்முகமலர் (இளைப்பாறிய ஆசிரியை), சண்முகேஸ்வரி (இளைப்பாறிய வங்கி அதிகாரி) ஆகியோரின்சகோதரரும்,
காலஞ்சென்ற மலைமகள், சிவவாகிசர், விமலநாதன், திருநாவுக்கரசு ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
