திரு. கந்தையா தில்லையம்பலம்

(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர், வதிரி சனசமூக நிலைய போஷகர், சபைத் தலைவர்- வதிரி மாணிக்கப் பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா, முன்னாள் பொருளாளர்- வதிரி கனகசிங்கப் பிள்ளையார் ஆலய, முன்னாள் பரிபாலன சபைத் தலைவர)

கந்தையா தில்லையம்பலம்

தோற்றம்: 07 மே 1922 - மறைவு: 27 டிசம்பர் 2021

யாழ். வதிரி கரவெட்டி கதிர்காம கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தில்லையம்பலம் அவர்கள் 27-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சோதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அருமைக் கணவரும்,

விஜயகுமார் (ஓய்வுபெற்ற கணக்காளர்- வவுனியா), காலஞ்சென்ற உமாகாந்தன், பவானி (ஓய்வுபெற்ற பிரதி புகையிரத களஞ்சிய அத்தியட்சகர்), குகேந்திரன் (பிரான்ஸ்), உமா (உதவி முகாமையாளர்- இலங்கை வங்கி, பருத்தித்துறை), காலஞ்சென்ற உஷா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,

அம்பிகா (ஓய்வுபெற்ற நூலகர்- வவுனியா), சூரியகுமாரி (கனடா), பத்மநாதன் (ஓய்வுபெற்ற சிறாப்பர்), விஜயகுமாரி(பிரான்ஸ்), வரதீஸ்வரன் (செயலாளர்- உள்ளூராட்சி அமைச்சு, வடமாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதித்தியன் (கனடா), உஷாந்தினி, கஜேந்திரன், நித்யா, அக்‌ஷயா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

விஜயவாசா,
கதிர்காம கோவிலடி,
வதிரி, கரவெட்டி.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2021 15:06)