Mr. Kandiah Yoganathan

Kandiah Yoganathan

Date of Birth: 12 March 1953 - Deceased: 22 February 2025

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா யோகநாதன் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா - பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,

ராகினி (ராசு) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான மாகாதேவா, ஜெயந்தி மற்றும் செல்வமலர், சத்தியவாணி, பத்மநாதன், குகநாதன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

தீபா, சோபா, தீபன், சுஜீப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டினேஸ்குமார், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஷாபிஷன், ஹரின், அனுஸ்கா, அபிஷா, ஷாணியா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று (இல-199/1, Customs Road, Trincomalle) எனும் முகவரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மாலை 4:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/02/2025 05:00)