திரு. கந்தையாபிள்ளை சண்முகராசா

(யாழ்.நவீன சந்தை, ஸ்ரீ கணேசா டெக்ஸ்டையில் உரிமையாளர்)

கந்தையாபிள்ளை சண்முகராசா

தோற்றம்: 08 ஜனவரி 1949 - மறைவு: 07 அக்டோபர் 2026

யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், இல- 853/3, கே.கே.எஸ் வீதி, தட்டாதெருச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையாபிள்ளை சண்முகராசா அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான எட்டியாந்தோட்டை கந்தையாபிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான ES.பேரம்பலம் - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜசுலோஜினி (ராஜி - இலண்டன்), கலைமகள் (மதி - கனடா), வாசுகி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருட்குமரன் (இலண்டன்), பிரசன்னா (கனடா), திலீப்குமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரங்கன், ஆர்த்தி (இலண்டன்), சாருஜன், அஜிசன், சமீனா, ஆதீரன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, மார்க்கண்டு, பரஞ்சோதி மற்றும் அன்னபூரணம் (காரைநகர்), சிவமணி (கொழும்பு), பாலசுப்பிர மணியம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, பாலாமணி, கணேசலிங்கம் (E.S.P) மற்றும் பரமேஸ்வரி (யாழ்ப்பாணம்), சகுந்தலாம்பிகை (கொழும்பு), நாகரத்தினம் (E.S.P) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 21 222 6751
+44 794 134 8301

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2026 00:00)