திரு. கணேசலிங்கம் சின்னையா (சின்னண்ணா, கணேஸ்)
மறைவு: 13 நவம்பர் 2025
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசலிங்கம் சின்னையா அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று மாலை ஜேர்மனியில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா - தவமணி (மணியக்கா) தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் (மகான் - கனடா), ஞானலிங்கம் (ஞானி - ஜேர்மனி) மற்றும் புஸ்பகலா (கலா - சுழிபுரம்), பகீரதன் (பகீர் - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-11-2025 செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் Hermann-Lons-Weg 28790 Schwanewede, Bremen இல் நடைபெறும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
