திரு. திருமதி. கணேசபிள்ளை கனகசபை - கனகாம்பிகை

கணேசபிள்ளை கனகசபை - கனகாம்பிகை

தோற்றம்: 17 மே 1932 - மறைவு: 25 ஏப்ரல் 2024

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, ஒட்டவா- கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை கணேசபிள்ளை அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்றும், அவரது துணைவியாரான கனகாம்பிகை அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்றும் இறைவனடி சேர்ந்தார்கள்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - நாகம்மா தம்பதியினரின் மூத்த புதல்வரும்,
 
காலஞ்சென்ற சுப்ரமணியம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற சுப்ரமணியம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்றவர்களான கனகசபை - நாகம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும் ,

சிவகுமார், துஸ்யந்தி ஆகியோரின் பாசமிகு தந்தை - தாயாரும்,

சாந்தகுமாரி, ரமேஷ் ஆகியோாின் அன்பு மாமன் - மாமியாரும்,

பகலவன், பொய்கை, சோபிகா, நிலவன் ஆகியோரின் அன்புப் பேரன் - பேத்தியும்,
 
காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் சரோஜினி தேவி (கனடா), பழனிவேல் (கனடா), சாரதா தாம்பாள் (கனடா), ஞானாம்பாள் (கனடா), வசந்தா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் - மைத்துனியும்,
 
காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் கணேசன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னார் இருவரினதும் புகழ் உடல் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 06-05-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரைக்கும் பார்வைக்கு Capital Funeral Home & Cemetery (3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada) இல் வைக்கப்பட்டு, காலை 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2024 04:00)