Mr Kanidah Shanmugalingam
Date of Birth: 22 July 1935 - Deceased: 19 November 2025
யாழ். நல்லூர் சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சண்முகலிங்கம் அவர்கள் 19-1-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற திருமதி ஈஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
லிங்கேஸ்வரி, சண்முகேஸ்வரி, விங்கேஸ்வரன், காலஞ்சென்ற இலங்கேஸ்வரி, சர்வலோகேஸ்வரி, கேதீஸ்வரி, கோடீஸ்வரன், தவலோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேந்திரன், பத்மநாதன், சசிக்குமார், பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், மனோன்மணி மற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
யதுர்ஷன், துலக்ஷன், கிப்ஷன், டிலக்ஷனா, ஹரிகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-11-2025 இன்று சனிக்கிழமை லங்கா மலர்ச்சாலை புஞ்சு பொரளையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
