Mrs. Kankesu Kamalambigai

Kankesu Kamalambigai

Date of Birth: 10 March 1946 - Deceased: 16 April 2025

யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும், Chur - சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காங்கேசு கமலாம்பிகை அவர்கள் 16-04-2025 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்.

காலஞ்சென்றவர்களானநாகலிங்கம் - சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற நாகப்பன் - இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காங்கேசு (வரணி - சுவிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

பார்த்திபன், தாரணி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலைமகள், குமரரூபன் (பாபு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவிசன், அதிசயன், அகானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களானபரமானந்தம், கணேசமூர்த்தி மற்றும், காலஞ்சென்ற கமலேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற அன்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகம்மா, இராஜதுரை, இலட்சுமி, இராசமலர், இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-04-2025 வியாழக்கிழமை முதல் 21-04-2025 திங்கட்கிழமை வரை முற்பகல் 10:00 - 7:00 மணி வரை Crematoria Chur (Sandstrasse 50, 7000 Chur, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-04-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2025 04:00)