Mrs. Kanmani Ponnusamy

Kanmani Ponnusamy

Date of Birth: 28 August 1939 - Deceased: 27 July 2025

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், தட்டாதெரு, கனடா - Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கண்மணி பொன்னுச்சாமி அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,

ருபேந்தி, பிரகலாதன், பிரதாபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லோகேந்திரன், நாராயணி, இளங்கோதை ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்ஷன், கிரோஷன், தாரிணி, ஷகானா, வைஷ்ணவி, அஜெய்னன், அஜானன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான ராசம்மா, பொன்னுத்துரை, சின்னம்மா, தியாகராஜா, செல்வராசா (வேலாயுதப்பிள்ளை), அழகரட்ணம் மற்றும் அன்னம்மா, இராசரத்தினம், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிங்கராஜா, தர்மராஜா, சிவகுருநாதன் மற்றும் அரியமலர், செல்வமலர், அருளானந்தம், புஷ்பமலர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-08-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் உடலம் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/07/2025 04:00)