திரு. கண்ணன் குணரட்ணம்
தோற்றம்: 23 மார்ச் 1962 - மறைவு: 19 மார்ச் 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கண்ணன் குணரட்ணம் அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம் (முறிகண்டி பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா) - விஜயராணி தம்பதியினரின் அன்பு மகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
டிலானி, டினேஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகாந்த், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஸ்வினின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை மதியம் 1:00 மணியளவில் Newark Road, New Ollerton, Newark NG22 0DY, United Kingdom இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
