Mrs. Kanniah Sivapackiyam

Kanniah Sivapackiyam

Date of Birth: 18 October 1939 - Deceased: 23 February 2025

யாழ். புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கண்ணையா சிவபாக்கியம் அவர்கள் 23-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் வெற்றிவேலு - பூரணம் தம்பதியினரின்ன் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கண்ணையா (கண்ணன் - பிரபல வர்த்தகர், ராஜா ஸ்ரோர்ஸ் கலா ரேடிங்- 4 ஆம் குறுக்கு தெரு, கொழும்பு -11) அவர்களின் அன்பு மனைவியும்,

பாஸ்கரன், காலஞ்சென்ற மனோகரன், ஜெயகரன், கலாஜோதி, ஜீவகரன், சிவகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராகினி, விஜிதா, சியாளினி, வாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பராசக்தி, நாகரத்தினம், சந்திரகோபால் (மன்மதன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, நாகேசு, மங்களாதேவி, சுந்தரம்பிள்ளை, மங்கையற்கரசி மற்றும் நவரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகாநிதி, சிவபாக்கியம், பேரின்பநாதன் மற்றும் கமலாசினி ஆகியோரின் சகலியும்,

பிரியங்கா, சிந்தியா, கெவின்ராஜா, ஜெனித்தா, ஜெனினா, ஜனீசா, ஜஸ்மீனா, ஜெயலக்சிகா, யாசில், ஜோலின், அஸ்வினி, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-03-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 - 8:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, LOH 10 Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2025 05:00)