Dr. Kanthappu Thirukketheshwaranathan
Date of Birth: 13 February 1964 - Deceased: 21 May 2026
யாழ். புலோலி வல்லிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தப்பு திருக்கேதீஸ்வரநாதன் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சரஸ்வதி - காலஞ்சென்ற சதாசிவம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
கெளரிமலர், நல்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வமனோகரன், சாந்தலிங்கம், வாசுகி, யசோதா, மனோகரி, சிவகணேஷன், சிவதாசன், சிவகுமாரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை A.F Raymond மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.30 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
