Mr. Kanthasamy Paramalingham

(இலங்கை நிர்வாக சேவை உயர் அதிகாரியும் (S.L.A.S) அமைச்சுக்களின் பல்வேறு தலைமைப் பொறுப்புக்களை வகித்தவரும் நயினை நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர்)

Kanthasamy Paramalingham

Deceased: 22 April 2026

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் வவுனியா, திருமலை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உயர் திரு. கந்தசாமி பரமலிங்கம் அவர்கள் 22-04-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய பரம்பரை தர்மகர்த்தா திரு.பரமலிங்கம் கந்தசாமி - நயினை புலவர், நாகமணி நாகரத்தினம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற சோமசுந்தரம் - விசாலாட்சி தம்பதியினரின் மூத்த மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

விவேகானந்தா, கிருபாஹரி, காலஞ்சென்ற ஜெயப்பிரபா, குகானந்தா ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,

சுகந்தினி, இளங்கோவன், குகானந்தன், கலைமகள் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜதுசனன், நந்தினி செந்தீபன், லலித், புவிநயன், அஞ்சலி அபிராபி, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கனகசபாபதி, குகதாசன், சவுந்தரம், காமாட்சிசுந்தரம், பராசக்தி, மகாலிங்கம், கமலாம்பிகை, இராசரட்ணம் மற்றும் லலிதாம்பாள் காலஞ்சென்ற மகாதேவா, ஞானசுந்தரம், நவரெட்ணராசா ஆகியோரின் உடன் பிறந்த சகோதரனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன், பரமேஸ்வரன், மகேஸ்வரி, ஞானேஸ்வரன், விக்கினேஸ்வரன், பரமேஸ்வரி, சுந்தரேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-04-2026 சனிக்கிழமை யாழ். கொக்குவிலிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

கந்தகோட்டம்,

63/1 கே.கே.எஸ் வீதி, கொக்குவில்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/04/2026 00:00)