திருமதி. கந்தசாமி பரமேஸ்வரி
தோற்றம்: 25 டிசம்பர் 1948 - மறைவு: 10 டிசம்பர் 2024
யாழ் மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 10-12-2024 செவ்வாய் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி-இராசம்மா தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற மாணிக்கர்-சிதம்பரம் தம்பதியினரின் ஆசை மருமகளும்
கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்
தர்மராஜா, றஞ்சனராசா (சுவிஸ்), சசிதாரா (ஜேர்மனி), ரவீந்திர ராசா (கனடா), ஜெயரஞ்சினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசிகலா, றஞ்சினி (சுவிஸ்), தயாபரன் (ஜேர்மனி), றிசியந்தினி (கனடா), சந்திரகாந்தன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கமலா தேவி, தேவயானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கராசா, துரைராசா, வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விதுஷா, மனுஷன், மதுமிதா, ராகவன் (சுவிஸ்), பாரதி (சுவிஸ்), கீர்த்திகா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
