Mr. Kanthasamy
Deceased: 12 March 2026
வடமராட்சியின் முது பெரும் முதிசம் ஒன்று சரிந்தது.
கட்டையப்பா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட திரு. கந்தசாமி அவர்கள் தன்னுடைய 102வது வயதில் 12/03/2026 இன்றைய தினம் இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் அத்தாய், மாலுசந்தி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.
மாலைசந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகரின் 8ம் திருவிழா (வேட்டை) உபயகாரரான இவர் ஒவ்வொரு வருடமும் தென் இலங்கையில் இருந்து யானை / மான் ஆட்டம் / மயில் ஆட்டம் / குதிரை போன்றவற்றை இறக்கி முத்து சப்பை ரத பவனியை மிகவும் சிறப்பாக நடத்தி முடிப்பவர்.
இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மிகவும் சுறு சுறுப்பானவர். கூனிய முதுகில் ஒரு சால்வை துண்டை அணிந்து கொண்டு மாலுசந்தி - ஆலடி வைரவர் வீதிகளில் நின்று வீதியால் செல்பவர்கள் யாராக இருந்தாலும் சால்வையை போட்டு மறித்து மோட்டார் சைக்கிளில் துள்ளி ஏறி சென்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் வல்லிபுர மாயவனை தரிசித்து வந்த ஜீவன்.
எல்லா ஆலயங்களிலும் இவரை காணலாம்.
அண்மையில் தான் இவரது பிள்ளைகள், உறவுகள் இணைந்து 100 ஆவது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள்.
இதுவரை காலமும் ஒரு விதமான நோய் நொடிகளும் இன்றி மிக்க மகிழ்ச்சியோடு சுறு சுறுப்பாக வாழ்ந்த கட்டையப்பா (கந்தசாமி) அவர்கள் மீளாத் துயில் கொண்டு எம்மை எல்லாம் ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார்.
மாலை சந்தையான் பாதங்களில் ஆழ்ந்து உறங்குங்கள் கட்டையப்பா.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு உங்களின் இழப்பினால் ஆறாத் துயர் உற்று இருக்கும் குடும்பத்தினர் அத்தனை பேரின் துயரிலும் நாமும் பங்கு கொள்கிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
www.tamilthakaval.org
