Mr. Kanthasamypillai Muthulingham

(SHANKO TEXTILE - COLOMBO-11)

Kanthasamypillai Muthulingham

Date of Birth: 07 June 1961 - Deceased: 02 August 2026

இந்தியா - திருச்சி மாவட்டம் திண்ணணூர் கிராமம் க.முத்துலிங்கம் அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம்  1.25 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திண்ணணூர் கிராமம் காலஞ்சென்றவர்களான கம்பளை) கந்தசாமி பிள்ளை - தையிலம்மை அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை (Fashions-Colombo-11) - பத்மாவதி தம்பதியினரின் மருமகனும்,

கனகவள்ளி அவர்களின் அன்புக்கணவரும்,

அபிநயா, மனோஜ்பிரசாத், யசோதா ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,

ரமேஷ்( கொழும்பு -04), செந்தில்குமார் (Apollo Enterprise Colombo-12) ஆகியோரின் மாப்பிள்ளையும்,

வனஜா (திருச்சி) அவர்களின் கொழுந்தனாரும்,

தனலட்சுமி, பரமேஷ்வரி, ராஜேஷ்வரி, விஜயகுமாரி, உதயசந்திரன் (சென்னை), கமலேஷ்வரி (சென்னை), காலஞ்சென்ற சிவலிங்கம் (கம்பளை) ஆகியோரின் சகோதரரும்,

ஆனந்த்  (திருச்சி) அவர்களின் சகலையும்,

செந்தூரன் (Mitsui Agencies - Colombo-12), கோகுல் (Stallion Trading - சென்னை) ஆகியோரின் மாமனாரும்,

அ.ஜெகநாதன் (Mitsui Agencies), பிரகலாதன் (Gokul Plywoods, சென்னை) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-08-2026 திங்கட்கிழமை காலை முதல் இல- 7/3, St. Marys Road, Colombo-15 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2026 00:00)