திரு. கந்தசாமிப்பிள்ளை பழனியாண்டிப்பிள்ளை

(General Hardware, Jana Lanka, Central Agency- Colombo-12)

கந்தசாமிப்பிள்ளை பழனியாண்டிப்பிள்ளை

தோற்றம்: 10 ஜூன் 1941 - மறைவு: 16 ஜூலை 2026

இந்தியா - திருச்சி மாவட்டம், சேருகுடி கிராமம் கொன்னக்குடையான் கோத்திரம் திரு. க. பழனியாண்டிப்பிள்ளை அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இரவு 11.30 மணியளவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான (உடப்புஸ்ஸலாவ) ரா.கந்தசாமிபிள்ளை - சிவகாமி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான (சொரகுண ஹல்துமுல்ல) வை.பழனியாண்டிப்பிள்ளை - பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,

தெய்வானை அவர்களின் அன்புக் கணவரும்,

கங்காதரன் (அமெரிக்கா), வாசுகி (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு தந்தையும்,

Dr. சு.ஆனந்தராஜ் (அமெரிக்கா), காயத்திரி ஆகியோரின் மாமனாரும்,

சா.தேவிகா, ரா.முரளீதரன் (Central Agency, Colombo -12), மு.மங்கையற்கரசி, ச.சந்திரலேகா ஆகியோரின் சித்தப்பாவும்,

காலஞ்சென்றவர்களான க.ராஜீப்பிள்ளை (உடபுஸ்ஸலாவ), சரஸ்வதி, மீனாம்பாள் (ராணி), மற்றும் பத்மாவதி (பதுளை) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ப.வையாபுரிப்பிள்ளை, ப.சுப்பிரமணியம்பிள்ளை, ப. ராஜீப்பிள்ளை, சுப்பையாப்பிள்ளை, ப.சிவலிங்கம்பிள்ளை (John), மற்றும் ப.முத்தையா (Central Agency, Colombo -12) ஆகியோரின் மாப்பிள்ளையும்,

காலஞ்சென்ற பெருமாள்பிள்ளை, ஜெயராம் (கொழும்பு), சிவஞானம் (பதுளை) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற பொன்னுசாமிப்பிள்ளையின் சகலையும்,

காலஞ்சென்ற பொ.அகிலாண்டம், ரா.மீனாம்பாள் ஆகியோரின் கொழுந்தனாரும்,

திருச்சி காலஞ்சென்ற ரஞ்சிதா தங்கவேல்பிள்ளை - ஜெயந்தி, திருச்சி காலஞ்சென்ற சுப்பிரமணியம்பிள்ளை - காமாட்சி அம்மாள் ஆகியோரின் சம்பந்தியும்,

தாரணி, தன்விகா ஆகியோரின் பாட்டாவும்,

கனிஷ்கர், கவிநாஷ், ஆதித்யா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-07-2026 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 39/19, அல்விஸ் பிளேஸ்,

கொட்டாஞ்சேனை, கொழும்பு -13.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2026 00:00)