திரு. கந்தசாமித்துரை செந்திவேல்
தோற்றம்: 08 டிசம்பர் 1959 - மறைவு: 28 செப்டம்பர் 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தசாமித்துரை செந்திவேல் அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமித்துரை - வள்ளியம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற ஈஸ்வரலிங்கம் - பங்கையற்செல்வம் தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜீந்தன், ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி, மகாலட்சுமி, காலஞ்சென்ற ருக்மணிதேவி, சிவகாமசுந்தரி, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, சக்திவேல், ஞானவேல், காலஞ்சென்ற ராஜவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2026 திங்கட்கிழமை அன்னாரது காட்டுவளவு இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
