Mrs. Kanthimathi Nadesan Muthaliyar
Date of Birth: 20 April 1934 - Deceased: 17 December 2025
இல-32, தாமரைக்கேணி வீதி, மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காந்திமதி நடேசன் முதலியார் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென் வேலுப்பிள்ளை ஏரம்ப முதலியார் (ஓய்வுபெற்ற அத்தியட்சகர் - நீர்ப்பாசனத் திணைக்களம்) - தேவரசி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் முதலியார் - பார்வதி அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடேசன் முதலியார் அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரேசன் (பிரபல கட்டிட ஒப்பந்தக்காரர்), வசந்தமாலா (மணிமலர் லொட்ஜ், கொழும்பு), சித்தரஞ்சன் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
திருவேணி, காலஞ்சென்ற தேவகி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
கமலநாயகி, கலாநிதி சுகந்தி, காலஞ்சென்ற மாணிக்கம் (மணிமலர் லொட்ஜ், கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலேசன் (கிழக்கு பிராந்திய முகாமையாளர் - லங்கா சதொச), மகேசன் (பல்கலைக்கழகம், நெதர்லாந்து), பவனேந்திரன் (இலண்டன்), சுஜிந்திரன் (மணிமலர் ஸ்டோர்ஸ், கொழும்பு), சசிந்திரன் (துபாய்), அனித்தா (இலண்டன்), கலாநிதி ரம்யா (கனடா), கலாநிதி ஷப்ரினா (கனடா) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
திருப்பூர் சொக்கலிங்கம் நாராயணசாமி முதலியார் அவர்களின் அன்பு மைத்துனியும்,
சுப்ரமணியம் (அரிஸ்டா கார்மண்ட்ஸ், திருப்பூர்), சந்திரமோகன் (ஹைடெக் கார்மண்ட்ஸ், திருப்பூர்) ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
