திரு. கபிலன் கனகலிங்கம் (பகி)
தோற்றம்: 18 ஜனவரி 1969 - மறைவு: 08 ஜூலை 2021
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் கபிலன் அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற நாகலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கனகலிங்கம் (லிங்கம் சகோதரர்கள், இளைப்பாறிய சங்கீத ஆசிரியர்), காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மநாதன் கனகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகெளரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஆரணி, ஆரபி, அஸ்வினி ஆகியோரின் அருமைத் தந்தையும்,
பாலமுரளி, பார்த்திபன், கார்த்திகா, மயூரதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகாந்தன், சிவரூபன், முகுந்தன், ஜெயகலா, சசிகலா, கௌசிகா ஆகியோரின் அருமை மைத்துனரும்,
சுகந்தப்பிரியா, வித்யா, பிரியாதர்ஷினி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
