திரு. காரளபிள்ளை கிருபாகரன்(கரன்)

காரளபிள்ளை கிருபாகரன்(கரன்)

தோற்றம்: 31 மே 1964 - மறைவு: 16 பெப்ரவரி 2026

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா, மொன்றியல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வல்மொறின் ஆலய தொண்டருமான திரு.  காரளபிள்ளை கிருபாகரன் அவர்கள் 16-02-2026 திங்கட்கிழமை மொன்றியலில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காராளபிள்ளை, இராஹேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, மனோன்மணி தம்பதியரின் அன்பு மருமகனும்,

கௌரிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரணவா, பிரவீன், பூமிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

கல்யாணி, நித்தியகலயாணி, கார்த்திகா (இந்திராணி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ரவிகுமார், சிவகுமாரன், செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபிகா, தனுஸ், விதுசன், சாகித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-02-2026ம் திகதி சனிக்கிழமை மாலை 5:00 மணிமுதல் 9:00 மணிவரை 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada உள்ள Aeteraa Funeral Complex இல் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 22-02-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதே இடத்தில் காலை 9:00 மணிமுதல் 12:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டுப் பின்னர், அன்னாரின் பூதவுடலுக்கு இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/02/2026 03:35)