திரு. கார்த்திகேசு ஜெயச்சந்திரா

(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்)

கார்த்திகேசு ஜெயச்சந்திரா

தோற்றம்: 25 ஆகஸ்ட் 1957 - மறைவு: 25 டிசம்பர் 2024

முல்லைத்தீவு - மல்லாவி 13D யோகபுரம் மல்லாவியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மலேசியா, கனடா, அளவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு ஜெயச்சந்திரா அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று அளவெட்டியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - அன்னப்பிள்ளை தம்பதியினரின் ஆசை மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இரத்தினேஸ்வரி தம்பதியினரின் அருமை மருமகனும்,

அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

விதுரணன், விதுகரன், ஹர்ணிகா, விகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ப்ரியதாரிணி, சிவநிரூபன், ப்ரியங்கா ஆகியோரின் அருமை மாமனாரும்,

சுந்தரலிங்கம், ஆனந்தராஜா, சுந்தராம்பாள், அரியமலர், நகுலேஸ்வரன், சத்தியபாமா, ஸ்ரீவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலேஸ்வரி, ஜெயதேவி, பாலச்சந்திரன், கந்தசாமி, சந்திரராணி,  சிவசுப்பிரமணியம், மதியழகன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

தான்வியின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-12-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் உய்யக்கட்டுவை அளவெட்டி (அருணோதய கல்லூரிக்கு முன்பாக) உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2024 05:00)