திரு. கார்த்திகேசு கமலசேகரன்

(மேற்பார்வையாளர் - கடதாசி கூட்டுத்தாபனம், வாழைச்சேனை, மட்டக்களப்பு)

கார்த்திகேசு கமலசேகரன்

தோற்றம்: 07 செப்டம்பர் 1938 - மறைவு: 04 ஆகஸ்ட் 2025

யாழ். அச்சுவேலி பத்மேனியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு கமலசேகரன் அவர்கள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு (ஓய்வுபெற்ற ஆசிரியர் - சித்திவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலை, பலாலி) - புவனேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - லஷ்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தனலஷ்சுமி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகிர்தா (உஷா), பிரதீபா (தீபா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

சுரேஸ் சந்திரா, பௌசிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வின், அபித்தா, அஜிஸ், சயானா, வருண், வருஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிவசேகரன் (கனடா), மனோரஞ்சிதமலர் (கனடா), காலஞ்சென்ற இராஜசேகரன், குணசேகரன் (கனடா), ஆனந்தசேகரன் (சுவிஸ்), புஸ்பரஞ்சிதமலர் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சிவபாக்கியம் அவர்களின் உடன்பிறவா சகோதரனும்,

நவரத்தினம் (இலண்டன்), காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், குணரத்தினம், மற்றும் இந்திரவதனி, திலகவதி, புவனேந்திநாதன், கமலவேணி, சற்குணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 - 10:30 மணி வரையும், 11-08-2025 திங்கட்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல்11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2025 04:00)