திரு. கார்த்திகேசு ஸ்ரீதரன்

கார்த்திகேசு ஸ்ரீதரன்

மறைவு: 13 மார்ச் 2025

யாழ். மல்லாகம், கல்லாரையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு ஸ்ரீதரன் அவர்கள் 13-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும், அம்பனை, தெல்லிப்பழையைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகலிங்கம்- சிவகெங்கை தம்பதியினரின் மருமகனும்,

சிறீ கெங்காதேவி (ரஜனி) அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகேசன், ரிஷிகேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தேவராஜா, கிருஷ்ணராஜா மற்றும் திருமதி பூபதி கதாகரன், திருமதி பவளராணி கந்தையா ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கதாகரன், சிவகங்கை மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற கந்தையா, சிறீகெங்காதரன் (மனோன்), சிறிபால கெங்காதரன் (ரவி), காலஞ்சென்ற சிறீபால கெங்காதேவி (பாப்பா), சிறீ சபேசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரி இறுதிக்கிரியைகள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 - 9.00 மணி வரை St Barnabas Parish Hall (23 Dulwich Village, London SE21 7BT) எனுமிடத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் Hither Green Crematorium (Verdant Lane,London SE6 1TP) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/03/2025 01:28)