திருமதி. கார்த்திகேசு நவரத்தினராசா (கறுவல்)

கார்த்திகேசு நவரத்தினராசா (கறுவல்)

மறைவு: 17 மே 2026

யாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு நவரத்தினராசா அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் கார்த்திகேசு - மகேஸ்வரி தம்பதியினரின் மகனும், சுழிபுரத்தைச்சேர்ந்த பாலசிங்கம் - மீனாட்சி தம்பதியினரின்  மருமகனும்,

காலஞ்சென்ற லோகேஸ்வரி (ஈசு) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜினி, ரஜிதா, ஜதீசன், ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-05-2026 திங்கட்கிழமை மாப்பாணவூரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆலங்கன்று இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2026 00:00)