Mr. Karthikesu Yogarajah
(முன்னைநாள் உத்தியோகத்தர்- யாழ் மாநகரசபை, Oceanick Impex)
Deceased: 11 April 2025
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு யோகராஜா அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்
பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr. பத்மயோகனின் (தேசிய பல் வைத்தியசாலை, கொழும்பு) பாசமிகு தந்தையும்,
தர்ஷனாவின் அன்பு மாமனாரும்,
சுவேஷனா, டிர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான லோகசுந்தரம், தங்கபூரணம், சோமசுந்தரம், விஜயசுந்தரம், உருத்திரசுந்தரம், தியாகராஜா, சௌந்தரம் மற்றும் சோமசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற மங்களேஸ்வரியம்மா, பத்மநாதன் (ஐக்கிய இராச்சியம்) அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மமலரச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
இல - 46 1/1 I.B.C Road,
வெள்ளவத்தை.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
