திரு. கரு.வேலு.ராமசாமி
(உரிமையாளர் - சென்ட்ரல் பிரிண்டர்ஸ் / அகிலம் பிரிண்டர்ஸ்-கண்டி)
தோற்றம்: 19 மார்ச் 1941 - மறைவு: 25 மார்ச் 2026
பதுளை எழுதலுவ பிறப்பிடமாகவும், இல- 308. டி.எஸ்.சேனாநாயக்க வீதி, கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கரு.வேலு ராமசாமி அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்ததார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கருப்பையா வேலு - அகிலாண்டம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பழ.தங்கவேலு - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஜயலக்ஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,
விஜயதர்ஷினி, சுதர்ஷன், பிரியதர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலரமேஸ், ஷஷீமா, நர்மதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தக்ஷன், திமத் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரம். காமாட்சி, நடேசன், கருப்பையா மற்றும் தெய்வானை, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
விஜயகுமார். நிர்மலா, சந்திரமோகன், வசந்தி, ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-03-2026 வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் களுபோவில ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
