Mrs. Karunadevi Kugananthan
Date of Birth: 21 June 1954 - Deceased: 06 June 2025
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல -05, இராமகிருஷ்ணா அவென்யூ, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கருணாதேவி குகானந்தன் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சரஸ்வதி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், திரு. திருமதி நடராஜா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி, காலஞ்சென்ற விமலாம்பிகை, சரோஜினிதேவி, காலஞ்சென்ற நித்தியமலர், சுந்தரலிங்கம், சகுந்தலாதேவி, காலஞ்சென்ற யோகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கணேசன், பாஸ்கரன், ஆனந்தலிங்கம், சோதிநாதன், வசந்தமலர், காலஞ்சென்ற பரதராஜா, பாலேஸ்வரி, ரஞ்சினி, சிவராஜன், சிவானந்தன், ராஜி ஆகியோரின் அன்புமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
