திருமதி. கருணாமூர்த்தி விஜயலக்ஷ்மி

கருணாமூர்த்தி விஜயலக்ஷ்மி

தோற்றம்: 14 ஜனவரி 1952 - மறைவு: 18 ஆகஸ்ட் 2025

யாழ். கச்சேரியைப் பிறப்பிடமாகவும், இல-29/5, புகையிரத நிலைய வீதி, அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கருணாமூர்த்தி விஜயலக்ஷ்மி அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - புஸ்பராசமணி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - கனகபூரணம் தம்பதியினரின் அருமை மருமகளும்,

கருணாமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

தாட்சாயினி (கனடா), மதனராஜன் (KM Studio), நிந்துஜா (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

கனகரட்ணம் (கனடா), ஜெயகாந்தன் (இலண்டன்), கீர்த்தனா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷாயினி, அபிநயா, துருவன், அத்தமி, தூரிகா, சுஜேன், இலக்கியா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

காலஞ்சென்ற ஜெயலக்சுமி, ஜெயலிங்கம், சுகிர்தலக்சுமி, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், புஸ்பலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்மலிங்கம், பாமா, ரவீந்திரன், ராஜீ, மகிழ்ராஜன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் கொழும்புத்துறை துண்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/08/2025 04:00)