திரு. கருணானந்தசிவம் குமாரரத்தினம்
தோற்றம்: 01 ஜனவரி 1942 - மறைவு: 29 மே 2025
யாழ். வேலணை கிழக்கு 1ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா - Markaham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கருணானந்தசிவம் குமாரரத்தினம் அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரரத்தினம் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராஜா (துரை) - இரத்தினம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுகந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அனிதா, ஜினிதா, கருணராஜ் (ராஜ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனுஷாந்தன், சசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரியானா, அர்நிஷா, மயூரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
மணிமேகலாதேவி (கலா - அவுஸ்திரேலியா), சற்குணதேவி (தேவி - கனடா), காலஞ்சென்ற ஸ்ரீதரன் (ரவி), வரதலட்சுமி (இலங்கை), இராகுலன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுந்தரமூர்த்தி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பத்மநாதன், லலிதாதேவி (இலங்கை), அருள்தாஸ் (இலங்கை), பிரியாழினி (லண்டன்), சுலோசனாதேவி, ஸ்ரீபற்குணன், காலஞ்சென்ற வசந்தகுமாரன், பரமேஸ்வரன், தவனேசன் (ஜேர்மனி), நரேந்திரன், பாலகிருஷ்ணன், பாஸ்கரன், அனுராதா, ரூபினா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2025 திங்கட்கிழமை மாலை 5:00 - 8:00 மணி வரை Ogden Funeral Homes (4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
