திரு. கருப்பையா சண்முகம் கவுண்டர்

கருப்பையா சண்முகம் கவுண்டர்

தோற்றம்: 05 பெப்ரவரி 1945 - மறைவு: 06 ஜூலை 2025

இந்தியா -நாமக்கல் மாவட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - 15, அளுத்மாவத்தையை (Tiara Apartment) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கருப்பையா சண்முகம் கவுண்டர் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கருப்பையா கவுண்டர் - செல்லாயி தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற காளியண்ணன் கவுண்டர் - காளியம்மா தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற ராதா அவர்களின் அன்புக் கணவரும்,

கோகிலராஜ், பரமேஸ்வரி, சிரியாணி ஆகியோரின் தந்தையும்,

காளிதாஸ் (ARK Associates), ஶ்ரீபாலேந்திரன் (Muthimari Stores), ரஞ்சனி ஆகியோரின் மாமனாரும்,

ஹரேந்திரன், கிருத்திக், ஶ்ரீஅபிஷேக், கனிஷ், ஶ்ரீச்பரிஷா, நிரல்யா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-07-2025 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2025 04:00)