Mr. Karuppaiyapillai Krishnamurthy

(Besco Steel Centre)

Karuppaiyapillai Krishnamurthy

Date of Birth: 19 December 1959 - Deceased: 11 July 2024

இந்தியா-திருச்சி மாவட்டம் வெங்கடாசலபுரம் கொன்னக்குடையான் கோத்திரம், கொழும்பு பம்பலபிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கருப்பயைபிள்ளை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நோட்டன் பிரிஜ் காலஞ்சென்ற கருப்பையா பிள்ளை-செல்லம்மா தம்பதியினரின் புதல்வனும்,

காலஞ்சென்ற கம்பளை திருப்பதியாபிள்ளை-பச்சையம்மாள் தம்பதியினரின் மருமகனும்,

விஜயராணி அவர்களின் அன்புக்கணவரும்,

அக்‌ஷாந்த், ஷாத்விகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வீரமாத்தி பிரயதர்ஷினி அவர்களின் அன்பு மாமனாரும்,

சுந்திரேஸ்குமார்-அலமேலு (திருப்பூர்) ஆகியோரின் சம்பந்தியும்,

காலஞ்சென்ற யோகராஜா, பிரபாகரன், ராஜேஸ்வரி, நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சௌந்தரராஜன் (கவிதாஸ்), கிருஷ்ணமூர்த்தி, பாலச்சந்திரன்(Kavico Traders), காலஞ்சென்ற ராமச்சந்திரன், மகேந்திரன் (மகான்) ஆகியோரின் மாப்பிள்ளையும்,

காலஞ்சென்ற இந்திராணி, சரோஜினி, மகேஷ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

சிவலிங்கம், நாகலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

கருப்பையா, தியாகராஜன், ஜெகநாதன் (ஆரத்தி டெக்ஸ்) ஆகியோரின் சகலையும ஆவார்.

அன்னாரின் புகழுடல் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/07/2024 04:00)