Mr. Karuppannan Rajasingham
(ரம்யா ஜுவல்லர்ஸ், கடல் வீதி, கொழும்பு - 11)
Date of Birth: 28 February 1959 - Deceased: 08 July 2026
கண்டி - புஸ்ஸல்லாவையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கருப்பண்ணன் இராஜசிங்கம் சேர்வை அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கருப்பண்ணன் சேர்வை - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற சோலைமலை சேர்வை - தங்கம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
தமிழரசி அவர்களின் அன்பு கணவரும்,
திலக்ஷிகா, டனுஷித்தா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனுஷனின் (CIC Holdings) அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமசிவன், வரதராஜன் (இந்தியா), சூரசங்கர் மற்றும் இராஜேந்திரன் (இந்தியா), காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, இராதாகிருஷ்ணன் மற்றும் வசந்தகுமாரி ஆகியோரின் இளைய சகோதரனும்,
கதிரேசன் - சுமதி தம்பதியினரின் சம்பந்தியும்,
துருவ் இன் செல்லப்பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-07-2026 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இறுதி கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் கெரவலப்பிட்டிய இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
