திருமதி. காசிநாதன் நாகம்மா

காசிநாதன் நாகம்மா

தோற்றம்: 19 ஏப்ரல் 1944 - மறைவு: 08 ஜூன் 2024

யாழ் நீர்வேலி வடக்கினைப் பிறப்பிடமாகவும்,வதிவிடமாகவும்  தற்போது  கோப்பாய் வடக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி காசிநாதன் நாகம்மா அவர்கள் 08-06-2024ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் பாக்கியம் அவர்களின் அன்பு மகளும்,
 
சின்னத்தம்பி செல்லம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற காசிநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
திருஞானசம்பந்தர், சந்திரசேகரம் மறறும் காலஞ்சென்ற சிவசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
செல்வராணி, தவமலர், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
பிரதீபன் (பிரான்ஸ்), குமுதினி (நோர்வே), மகிழினி (யாழ் /உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
குணரஞ்சினி (பிரான்ஸ்),  ராஜ்குமார் (நோர்வே), மோகனராசன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்-பிரதி பிரதம செயலாளர் திட்டமிடல் அலுவலகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்.
 
அஞ்சனா(பிரான்ஸ்), அக்ஷனா (நோர்வே), சாறுக் (நோர்வே), திவ்வியகரன்(களனி பல்கலைக்கழகம்), சாம்பவி (இராஜரட்டைப் பல்கலைக்கழகம்), காருண்யா (யா/ வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 11-06-2024ம் திகதி செவ்வாய்கிழமை காலை 800 மணியளவில் கோப்பாயில் உள்ள அவரின் மகளின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி சியாக்காடு இந்து மயானத்திற்கு
எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
விலாசம்:-
 
MPCS LANE
கோப்பாய் வடக்கு

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2024 22:54)