Mr. Kasipillai Thalayasingam

(முன்னாள் கிராம சேவையாளர் - அல்லைப்பிட்டி, சரவரண, கோண்டாவில், யாழ்ப்பாணம்)

Kasipillai Thalayasingam

Date of Birth: 06 May 1936 - Deceased: 10 March 2024

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதியை வசிப்பிடமாகவும், Paris Epone பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை தளையசிங்கம் அவர்கள் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - செல்வநாயகி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம் (பெரியசபா) - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சபாராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஞானச்சந்திரன் (சந்திரன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

பத்மசுகி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானேஸ்வரி, திருலோகவதி, இராஜேஸ்வரன் மற்றும் சாந்தசிவரூபி (இலங்கை), காலஞ்சென்ற ரேவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன்- பத்மராணி தம்பதியினரின் சம்பந்தியும்,

சர்வானந்தன், காலஞ்சென்ற பங்கயற்செல்வி மற்றும் சபாமணி, காலஞ்சென்ற காந்திசொரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, செல்வரெத்தினம் மற்றும் சாந்தகுமாரி (பிரான்ஸ்), காலஞ்சென்ற சாந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, நவரெட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிதர்ஜன் (பிரான்ஸ்), நிரோஜினி (பிரான்ஸ்), நிவேதனா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2024 04:00)