திருமதி. காசிப்பிள்ளை நவநந்தினி
தோற்றம்: 02 ஜூன் 1964 - மறைவு: 31 டிசம்பர் 2024
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Ecublens வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காசிப்பிள்ளை நவநந்தினி அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பிறிந்தாஸ், கம்சியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுஜேந்திரன், பானுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காசினி, வருந்தாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திலகா (ஜேர்மனி), ரதி, லதா (இலங்கை), பிறேம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருநாவுக்கரசு, பாலசிங்கம் (இலங்கை), விஜயநிர்மலா (ஜேர்மனி), இன்பராணி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-01-2025 புதன் முதல் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை வரை முற்பகல் 10:00 - 3:00 மணி வரை Crématoire Chem. (du Capelard 5, 1007 Lausanne, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 06-01-2025 திங்கட்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
