திரு. காசிப்பிள்ளை பஞ்சநாதன்

(ஓய்வுபெற்ற கணக்குப் பதிவாளர் - மன்னார் நகரசபை)

காசிப்பிள்ளை பஞ்சநாதன்

தோற்றம்: 07 ஜனவரி 1942 - மறைவு: 17 ஏப்ரல் 2024

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் (பயிரிக்கூடல்), மன்னார் (செமினரி றோட்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை பஞ்சநாதன் அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

செல்வராணி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக்கணவரும்,

Dr. சந்திரசேகரம் (லண்டன்), காலஞ்சென்றவர்களான லங்கநாதன், அன்னபூரணம், அன்னபாக்கியம், ராணிதேவி ஆகியோரின் சகோதரரும்,

கரன் (முகாமையாளர் - விஞ்ஞானம் களக்கற்கை நிலையம் வலயக்கல்வி அலுவலகம் - மன்னார்), காண்டீபன் (பொறியியலாளர் - லண்டன்), கலைப்பிரியா (ஆசிரியை - முஸ்லிம் மகளிர் கல்லூரி - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மாஜினி (ஆசிரியை- புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி - மன்னார்), துளசி (லண்டன்), டெரிஷன் (மென்பொருள் பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆரூரன், ஆருஷி, அஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் தகனக்கிரியைகளுக்காக மன்னார் பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:

சிறிய குருமட வீதி,

மன்னார்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/04/2024 04:00)