திரு. காசித்தம்பி மயில்வாகனம்

(ஓய்வுபெற்ற ஆசிரியர்)

காசித்தம்பி மயில்வாகனம்

தோற்றம்: 14 டிசம்பர் 1928 - மறைவு: 12 மார்ச் 2021

யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசித்தம்பி மயில்வாகனம் அவர்கள் 12-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

குகநேசன் (கனடா), கோமளா (கனடா), மோகனா (கனடா), ஜெயரூபி (ஆசிரியை- கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம்), ஜீவநேசன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராசம்மா, கனகலிங்க, மகாலிங்கம், வன்னியசிங்கம், அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தங்கராசா, ஞானாம்பிகை, செல்வநாயகி, யோகம், சண்முகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராகவன் (கனடா), இரமேஸ் (கனடா), பாஸ்கரன் (முகாமையாளர்- இலங்கை), மதி (கனடா), சிவப்பிரியா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிறாஜ் (கனடா), மதிலா (கனடா), இரகாணன் (கனடா), இரபீனன் (கனடா), கேசவி (வேம்படி மகளீர் கல்லூரி மாணவி), அட்சயன் (சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன்), டின்சிகா (பிரான்ஸ்), யனுசன் (கனடா), பிரணவி (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
குகநேசன் - மகன் Mobile : +1 647 638 2654
கோமளா - மகள் Mobile : +1 416 968 4162
மோகனா - மகள் Mobile : +1 416 508 4920
ஜெனா Mobile : +94 77 821 9072
பாஸ்கரன் - மருமகன் Mobile : +94 77 692 0171
சாரதாதேவி - மனைவி Mobile : +94 76 239 9496
பவன் - மகன் Mobile : +33 60 679 1893

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/03/2021 14:20)