திரு. காசித்தம்பி நவரத்தினம்(காசி நவரத்தினம்)

காசித்தம்பி நவரத்தினம்(காசி நவரத்தினம்)

தோற்றம்: 17 டிசம்பர் 1941 - மறைவு: 25 ஜூலை 2020

யாழ்.ஆவரங்காலை பிறப்பிடமாகவும்,ஆவரங்காலை வசிப்பாடமாகவும்,தற்போது கொழும்பு கிருலப்பனையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட காசித்தம்பி நவரத்தினம்

(காசி நவரத்தினம்) அவர்கள் 27-07-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர்,இலங்கை வானொலி,வீரகேசரி மற்றும் சூரியன் F M ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக கடமை புரிந்தவர் ஆவார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான காசித்தம்பி தம்பதிகளின் இளைய புதல்வரும்,
 
காலஞ்சென்ற சுப்பையா மற்றும் சிவபாக்கியம் அவர்களின் மருமகனும்,
 
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சிவதர்சினி,அம்பிகை,காசி ராசன்,காசி ரூபன் ,அபிராமி அவர்களின் அன்புப் தந்தையாரும்,
 
தர்மன்,தர்சி மற்றும் ஜெனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம்,பாக்கியம்,சாந்தலிங்கம் மற்றும் இராமநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
ஹரி,ஹிரன்,நிலா,சந்தோஸ்,சகானா,சஞ்சேய்,டிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-07-2020ம் திகதி செவ்வாய்கிழமை அன்று காலை 9.00 மணி தொடக்கம் மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பகல் 12.00 மணிக்கு கிரியைகள் நடைபெற்று 2.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-குடும்பத்தினர் 

www.tamilthakaval.org


"1976 -இல்  நான் இலங்கை வானொலியை விட்டு பிரிட்டன் செல்லும் வரை என்னுடன் மிக அன்பாகவும் மரியாதையுடனும் பழகிய ஒரு பண்பாளன் காசி. கடந்த  44 ஆண்டுகளாக அவருடன் மீண்டும் தொடர்பு ஏற்ப்படுத்த முயன்று தோல்வி கண்டேன். இன்று துயர் பகிர் அறிவித்தல் பார்த்து இடி விழுந்தவன் போல ஆனேன்  அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தவர்க்கு என் வணக்கங்கள் இறைவன் வழி காட்டுவார் "
- WIMAL SOCKANATHAN (UK, 29/07/2020 04:02)
"நாம் மூச்சு முயற்சித்து வந்ததால் மூச்சிருக்கும் வரை முயற்சிக்க வேண்டும் என்றனா் உழைப்பை முன்னிலைப்படுத்தும் சிந்தனையாளா்கள். அண்ணா் காசி நவரத்தினம் அவா்கள் உழைப்பை உறுதியாக நம்பி தன் பணிகளில் ஈடுபட்டவா். எமது சிறு வயதில் வீரகேசரிப்பத்திரிகையை அன்றாடம் வாசிக்க கையில் எடுக்கையில் முதலில் கண் செல்வது காசி நவரத்தினம் என்ற பெயரை வாசிக்கத்தான். பெருமையாக பணி செய்த வேளை 1983 ஆடி மாதம் திருநெல்வேலியில் படையினா் மீது மேற்கொள்ளப்பட்டமை தொடா்பான செய்தி சேகரிக்க நடந்து செல்லும் வேளை அவா்கண்முன் சைக்கிளில் நான் சந்தித்தேன். தன்னை சம்பவம் நடந்த இடத்திற்கு அண்மையில் விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார்.நானும் அதற்கிணங்கி ஏற்றிச் சென்றேன். பலாலி வீதி வழியாகச் செல்கையில் படையினா் சுட்டுக்கொண்டு எம்மை நோக்கி வருவதைக் கண்ணால் பாா்க்கக் கூடியதாக தெரிந்தது. நான் தொடா்ந்து செல்ல மறுத்து சைக்கிளில் இருந்து இறக்கி விட்டேன். காசி நவரத்தினம் அவா்கள் வீதியால் செல்லாமல் காணிகள் ஊடாக சம்பவம் நடந்த இடத்தை நோக்கிச் சென்றார். காசி நவரத்தினம் அவா்களின் செய்திப்பசி அவரின் கடமை மற்றும் பணியின் மகிமையை எனக்கு உணா்த்தியது. பின்நாளில் மொழிபெயா்ப்புப்பணி தொடா்பில் சில கலந்துரையாடல்களுக்கு என்னை நாடி வருவார். அவருடன் பேசும் தருணங்கள் மகிழ்ச்சியானவை. எனக்குத் தெரிந்த ஒரு வழியில் உதவுவதற்காக இலங்கை சென்று அவரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தேன். அவருடன் பழகியவா்கள் மற்றும் பணியாற்றிய பலரைப் போல் நானும் வருத்தமடைகின்றேன். மனம் தான் மூச்சு என்பார்கள். சிந்தனை மற்றும் செயல்களை மனமே வழி நடத்துகின்றது. சிலரின் வாழ்க்கை மூச்சு நின்ற பின்பும் தொடரும். ஆனால் மூச்சு நின்றாலும் அண்ணா் காசி நவரத்தினம் அவா்களின் மனம் மற்றவா்களின் மனதில் வாழும். "
- இளையகுட்டி செல்வநாயகம் (ஐக்கிய அமெரிக்கா, 29/07/2020 02:49)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/07/2020 01:43)