திரு. லயன் ஆறுமுகம் காசித்தம்பி இராமநாதன்
(ஓய்வுநிலை இராணுவ அதிகாரி RSM(WOI))
தோற்றம்: 29 ஆகஸ்ட் 1938 - மறைவு: 23 ஜனவரி 2024
யாழ். பன்னாலையை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திரு. லயன் ஆறுமுகம் காசித்தம்பி இராமநாதன் (ஓய்வுநிலை இராணுவ அதிகாரி, RSM(WOI)) அவர்கள் இன்று 23-01-24ம் திகதி செவ்வாய்க்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார்.காலஞ்சென்றவர்களான திரு திருமதி காசித்தம்பி தம்பதியரின் பாசமிகு மகனும்.
காலஞ்சென்றவர்களான திரு திருமதி சுப்பிரமணியம் தம்பதியரின் அன்பு மருமகனும்.
தங்கேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற பாக்கியராணி (ராணி ரீச்சர்) அவர்களின் அன்புக் கணவரும்.
நிரஞ்சன் (கனடா), நிர்மலா (லண்டன்), செல்வரஞ்சன் (லண்டன்), ஶ்ரீரஞ்சன் (லண்டன்), நிர்த்திகா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
ரதிகலா, தவபாலசிங்கம், சுகந்தினி, யமுனா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரண், லக்சிகா, நிகிதா, பிறீதா, நவீனா, நமீரா, டசானி, டிஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், பாக்கியம், சாந்தலிங்கம், காசிநவரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்.
கதிரவேற்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கனகசிங்கம்,சிவபாக்கியம், மற்றும் பாக்கியலட்சுமி, யோகநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் எதிர்வரும்26-01-2024ம் திகதி வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனம் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2024 22:50)
