திருமதி. கஸ்தூரி திருமால்
(ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர் - கதிரேசன் மத்திய கல்லூரி, நாவலப்பிட்டி)
தோற்றம்: 08 ஜனவரி 1958 - மறைவு: 09 ஜூலை 2024
நுவரெலியா-பூண்டுலோயாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கஸ்தூரி திருமால் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணசாமி நாயுடு-வீரம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துரைசாமி நாயுடு-கோவிந்தம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருமால் நாயுடு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தனலட்சுமி, சரோஜா, பத்மராஜ், கேசவன், வேணுகோபால், சஞ்சீவி, நவநிதி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
யாழினி, மனோஜ் பிரசன்னா, பிரகாஷினி ஆகியோரின் அன்பு தாயாரும்,
குகன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சாக்ஸவி, கபிஷ்கா, பிரணவி ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 10-07-2024 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-07-2024 சனிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியகள், தகனம் நடைபெறும்,
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
