திருமதி. கதிராசிப்பிள்ளை கஜநாயக்கபாகு
(ஓய்வுபெற்ற தாவரவியல் ஆசிரியை (BSc) - யூனியன் கல்லூரி)
தோற்றம்: 18 ஏப்ரல் 1937 - மறைவு: 29 செப்டம்பர் 2026
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 1/6 E.S. Fernando Mw, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கதிராசிப்பிள்ளை கஜநாயக்கபாகு அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இளையதம்பி கஜநாயக்கபாகுவின் அன்பு மனைவியும்,
Dr. இளங்குமரபாகு (யாழ். போதனா வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்), ஸ்ரீ. கல்யாணி (கொழும்பு இசிப்பத்தான கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீகாந்தன் (Ministry of Health Retired Program Officer), Dr. கவிதா (யாழ். போதனா வைத்தியசாலை விசேட நரம்பியல் நிபுணர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ்ரீகுமரன், ஸ்ரீபிரணவன், காவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பார்வதிதேவி (யூனியன் கல்லூரி ஆசிரியை), தெய்வானைப்பிள்ளை (வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை) மற்றும் Dr. சி. நாகேந்திரா (விசேட வைத்திய சிகிச்சை நிபுணர்) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (முன்னாள் துணை அதிபர் - யாழ். நடேஸ்வராக் கல்லூரி), செல்வராசா (ஆசிரியர்), நாகேந்திரா (பொறியியலாளர்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-09-2026 புதன்கிழமை அன்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
