Mr. Kathiravelu Mahadeva
(கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர்)
Deceased: 26 March 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேலு மகாதேவா அவர்கள் நேற்று 26-03-2025 புதன்கிழமை அன்று அதிகாலை தனது 77வது வயதில் காலமானார்.
அன்னார், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும், உறுப்பாண்மைக்குழுச் செயலாளர், உதவிச் செயலாளர், பொது செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தும், சங்க இதழ் 'செய்தி மடல்' முறையாக வெளியிட அதன் தொகுப்பாசிரியராகவும் கடமையாற்றியவர் என்பது எளிதில் மறந்து விட முடியாது.
மேலும் சங்கத்தின் வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பாக செயலாற்றியவர் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கொழும்புத் தமிழச் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
அன்னாரின் நிகழ்வுகள் 29-03-2025 சனிக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியவில் இறுதி கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழடல் கல்கிசை பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- பொதுச் செயலாளர் - தமிழ்ச் சங்கம், கொழும்பு
www.tamilthakaval.org
