திருமதி கதிரவேலு நாகேஸ்வரி
தோற்றம்: 11 ஜூலை 1940 - மறைவு: 01 ஜூலை 2020
அம்மாவின் சகோதர, சகோதரிகளில் கடைசியாக இவ்வுலகைவிட்டு விண்ணுலகத்துக்குச் சென்றவர்.
யாழ் வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, சிட்னி-நியூகாசில், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கதிரவேலு நாகேஸ்வரி இன்று 01.07.2020 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் உருக்குமணி தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அப்புகுட்டி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலுவின் (பொறியியலாளர் - அவுஸ்திரேலியா) அன்பு மனைவியும்,
ஸ்ரீரங்கன் (ஓய்வுநிலை அதிபர், மகாஜனக் கல்லூரி பழைய மாணவன்), Dr.யாழினி (மகாஜனக் கல்லூரி பழைய மாணவி), ஸ்ரீதரன் (பொறியியலாளர் அவுஸ்திரேலியா மகாஜனக் கல்லூரி பழைய மாணவன்) கமலினி (இரசாயன பொருளியலாளர், யூனியன் கல்லூரி பழைய மாணவி) ஸ்ரீமுகுந்தன் (பிரான்ஸ் யூனியன் கல்லூரி பழைய மாணவன்), சிவாஜினி (கணக்காளர் – அவுஸ்ரேலியா யூனியன் கல்லூரி பழைய மாணவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரன் (ஆசிரியர் இலண்டன்), நாகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான புட்கலாதேவி (ஆசிரியர் - யூனியன் கல்லூரி பழைய மாணவி) , வள்ளியம்மை, பரஞ்ஜோதி மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வனஜா, Dr.யோகேஸ்வரன், சந்தானலட்சுமி (ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் அவுஸ்திரேலியா), மனோகரன் (செயற்பாடு முகாமையாளர் சவுதி அரேபியா), அமிர்தரஞ்சினி (பிரான்ஸ்), சத்தியலிங்கம் (கணக்காளர் அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புமாமியாரும்,
திருமதி அனுராதை கேசவன் (ஆசிரியை - கனடா, யூனியன் கல்லூரி பழைய மாணவி) அவர்களின் அன்பு அத்தையும்,
அச்சுதன் (பொருளியலாளர்), Dr.ஆர்த்திகை, Dr.வசீதன், விவேகா (பொறியியலாளர்), முகுந்தராஜ் (பொறியியலாளர் சிங்கப்பூர்), வர்ணசுதன் (பொறியியயல்பீடம் - மொறட்டுவ), Dr. அபிராமி, Dr. நிருத்தன், அபிவர்மன் (பொறியியலாளர் சுவிற்ஸர்லாந்து), கீர்த்தனா (தரநிர்ணய முகாமையாளர் சுவிற்ஸர்லாந்து), Dr.ஹரி பிரகாஸ், Dr.தாணியா ஈஸ்வரி, கணன் விசாரன் (அவுஸ்திரேலியா), நிவேதினி (முன்னாள் வங்கியாளர்) நிரூசன் (பொறியியலாளர் சிங்கப்பூர்), ஹரிராஜன் (மாணவன்- SLIIT), விஜிராஜன் (மாணவன் புனித தோமாஸ் கல்லூரி கொழும்பு) சாரங்கி (ஆசிரியர் பிரான்ஸ்), சங்கீதா (கணககாளர் பிரான்ஸ்), சாருதன்(பிரான்ஸ்), மிதுஷன் (பல்கலைக்கழக மாணவன் அவுஸ்திரேலியா) மகிஷா (மாணவி அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,
ரிஷாக், அவிக்னா, அனந்தரேகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.07.2020 வியாழக்கிழமை பி.ப. 2.00 மணியளவில் 21/1 குமாரசாமி வீதி, கந்தர்மடத்தில் உள்ள இல்லததில் இடம்பெற்று பூதவுடல் பி.ப 3.00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:-Bala Yazhkovan, குடும்பத்தினர்
Address:
இல. 21/1, குமாரசாமி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு:-
+94 21 222 6410, +94 77 394 6026, +94 77 361 8121
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/07/2020 23:55)
