திரு. கதிரவேலு சிவராசா (சின்ராசா)
மறைவு: 05 ஆகஸ்ட் 2024
யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேலு சிவராசா அவர்கள் 05-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவத்திரா, சித்திரலேகா, சங்கீதா, ஜனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருமைநாயகம், காந்திதேவி, சிவபாதம், தியாகராசா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-08-2024 செவ்வாய்கிழமை அன்று மதியமளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரிகைக்காக புளியங்கூடல்/ சுருவில் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2024 07:04)
