Mrs. Kathiresapillai Thavamany
Date of Birth: 07 January 1938 - Deceased: 18 June 2023
யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரேசபிள்ளை தவமணி அவர்கள் 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கையிலாயபிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற துரைச்சாமி, பொன்னுமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரேசபிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாந்தினிகுமாரி (ஐக்கிய அமெரிக்கா - New Jersey), யசோதினி, காலஞ்சென்ற வினோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாஸ்கரலிங்கம் (ஐக்கிய அமெரிக்கா - New Jersey), சிற்றம்பலம் ஆகியோரின் அருமை மாமியாரும்,
றுஸ்தா - நர்மதன், பல்லவி - ரன்வீர்சிங், பைரவி, விருத்திகா, கன்சிறி - ஜீவிதா, ஜெயசிறி ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும்,
நாவ்யா, காயா, சமீரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் கனகரத்தினம், செல்வரத்தினம், இராசரத்தினம் (ஜேர்மனி), ருக்மணி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, கந்தையா மற்றும் பரஞ்சோதி, விநாயகமூர்த்தி (சுவிஸ்), ஈஸ்வரி, காலஞ்சென்ற முதலித்தம்பி மற்றும் பவளகாந்தி, ஈஸ்வரி, சிவமங்கை (ஜேர்மனி), காலஞ்சென்ற சாம்பசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, சிவமணி மற்றும் சரோஜினிதேவி, நாகேந்திரா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
