அமரா். கதிர்காமநாதன் விதுசன்

(3ம் வருட மாணவன், பொறியியற்பீட மாணவன் -மொறட்டுவ பல்கலைக்கழகம்)

கதிர்காமநாதன் விதுசன்

தோற்றம்: 02 மார்ச் 2001 - மறைவு: 12 ஏப்ரல் 2026

யாழ். சுன்னாகம் கிழக்கு, சுன்னாகத்தை பிறப்பிடாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கதிர்காமநாதன் விதுசன் அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கதிர்காமநாதன் - சிவாநந்தி தம்பதியினரின் மற்றும் மாதினி கணபதிப்பிள்ளை அன்பு புதல்வனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - இராசம்மா மற்றும் செல்லத்துரை (ஆயுள்வேத வைத்தியர்) - சின்னத்தங்கம் தம்பதியினரின் பேரனும்,

திருமாவளவன், வாகீசன், ஜெயமுகுந்தன் (சோக்குட்டி), இந்துமதி, அபிராமி, கதிர்காமதம்பி, ஞானேஸ்வரி, சிவமலர், ராஜேந்திரி ஆகியோரின் மருமகனும்,

சிவப்பிரியன், சங்கீதா, கர்ணி, ஹர்சி ஆகியோரின் சகோதரனும்,

நிலா சிவப்பிரியனின் சிறியதந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2026 புதன்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2026 00:00)