Mr. Kathirgamathambi Vadivel

(E V Wine Shop, Kanthan Liquor Shop, Bam Liquor Shop)

Kathirgamathambi Vadivel

Date of Birth: 19 April 1950 - Deceased: 08 April 2026

மட்டக்களப்பு - ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமத்தம்பி வடிவேல் அவர்கள் 08-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை கதிர்காமத்தம்பி - கண்டுமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா வில்லியம் செல்வராஜா - றொசலின் அரியமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இவாஞ்ஜலின் ராஜமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ஏஞ்சலின் லாவண்யா, வில்லியம் தர்மேந்திரா, றொசலின் ஹம்சத்தினி, கிறிஸ்டின் மதுர்ஷினி, ஜோராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், விநாயகமூர்த்தி, தர்மலிங்கம், சந்தானலக்ஷ்மி மற்றும் சரோஜினி, இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

அஞ்சலோ துஷ்யந்தன், சில்வின், பிரஷாத், ருபேஷ் ஆகியோரின் மாமனாரும்,

அடலின் லோஷண்யா, இவான்றலின் ஆஷ்வண்யா, வில்லியம் ஹாஷ்வின்ராஜ், ஜொஹானா லக்ஷயா, ஆரோன் வேதாந்த், எமிட் ரோஹித், என்றிட் தீக்ஷித் இவான்றலின் ருபினா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. பின்னர் 11-04-2026 சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு. 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மட்டக்களப்பு மாநகரசபை மின் மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2026 00:00)