திரு. கதிர்காமத்தம்பி ஆனந்தராஜா
(ஒய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்)
தோற்றம்: 28 செப்டம்பர் 1953 - மறைவு: 13 ஜூன் 2026
யாழ். கரவெட்டி யாக்கருவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், இனீசியம் ரோட், தெகிவளை மற்றும் சிங்கப்பூரை வசிப்பிடங்களாகக் கொண்டிருந்த திரு. கதிர்காமத்தம்பி ஆனந்தராஜா அவர்கள் 13-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கதிர்காமத்தம்பி - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சாந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷியா (சிங்கப்பூர்), சுதர்சனன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செயோன் (சிங்கப்பூர்), கவிதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆனந்தமலர் (அவுஸ்திரேலியா), தேவராஜா (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அத்துடன், சாதனா, சுகன், அஜன், ரேணா, அரியானா மற்றும் அர்ரா ஆகியோரின் அன்பிற்குரிய தாத்தாவும் ஆவார்.
"நினைவஞ்சலி"
அன்பும், பாசமும், கருணையும் நிறைந்த எங்கள் அன்புக்குரியவரின் பிரிவு எங்கள் மனங்களில் என்றும் ஆறாத துயரமாகவே உள்ளது.
உங்கள் இனிய புன்னகை, அன்பான வார்த்தைகள், குடும்பத்தின் மீது கொண்ட அளவற்ற பாசம் ஆகியவை எப்போதும் எங்கள் நினைவுகளில் நிலைத்திருக்கும். காலம் கடந்தாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் அழியாமல் வாழும்.
“நீங்கள் மறைந்தாலும் உங்கள் நினைவுகள் என்றும் மறையாது.”
என்றும் நினைவில்:-
உங்கள் அன்பு குடும்பத்தினர்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-06-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை கல்கிஸ்ச மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
