திருமதி. தில்லைநாயகி கதிர்காமு

தில்லைநாயகி கதிர்காமு

தோற்றம்: 10 ஜூலை 1942 - மறைவு: 18 பெப்ரவரி 2022

கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு தில்லைநாயகி அவர்கள் 18-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

பொன்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமு அவர்களின் அன்பு மனைவியும்,

லண்டனில் வசிக்கும் நாகநாதன், மதிவதனி, துளசி, வசந்தி, காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
தங்கமுத்து, மகேஸ்வரி, காலஞ்சென்ற மாணிக்கராஜா சிற்றம்பலம், சிவராஜா, சிவஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்ற இலக்சுமிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும்,
 
வருணியா, கெளதமன், அருச்சுனன், அபிராமி, ஆரணி, அருளினி, அச்சுதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2022 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கண்டாவளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
Note:   Please contact us via phone or email regarding queries or if you would like to attend the funeral via zoom
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/02/2022 05:16)